என் மலர்
சினிமா

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார். #Maamanidhan #VijaySethupathi
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
#மாமனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் தம்பி லியோ சிவக்குமார்.திறன்மிகு கலைஞர்.இவர் நாடறிந்த பேச்சாளர் திரு.லியோனி அவர்களின் புதல்வர்.முறைப்படி எங்கள் நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிக்கின்றார். pic.twitter.com/HEsxbbJd8G
— Seenu Ramasamy (@seenuramasamy) January 8, 2019
இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். #Maamanidhan #VijaySethupathi #SeenuRamasamy #YuvanShankarRaja #LeoSivakumar
Next Story






