என் மலர்
நீங்கள் தேடியது "Sri Reddy"
- சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி என்னை நானே பலியிட்டு கொண்டேன்.
- படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன்.
நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சினிமாவில் முன்னேற, செய்ய வேண்டியதை செய்துதான் வரவேண்டியது இருக்கிறது. நான் 'மீ டூ' புகார் பற்றி பேசும்போது, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் கூட குரல் கொடுக்கவில்லை. போதைப்பொருள் வழக்கில் கூட வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தொழிலும், பணமும், பேரும், புகழும்தான் முக்கியம். 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா, லேடிஸ் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை?
புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, பெரிய ஆட்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்சனைகள் குறித்து வெளியே சொல்லாதீர்கள். பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள்.
"சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி என்னை நானே பலியிட்டு கொண்டேன். படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன். இதனால் நானே ஒரு 'யூடியூப்' சேனல் தொடங்கினேன். கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன். சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று யோசிக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் கிடக்கும் எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். 'யூடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் இப்போது எனக்கு கைகொடுக்கிறது" என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போதை வழக்கில் நடிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
- ஒரு 'பார்ட்டி'யில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள்.
பாலியல் தொல்லைகள் தரும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்தி தெலுங்கு சினிமாவையே புரட்டி போட்ட நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சினிமாவில் அரங்கேறும் பாலியல் கொடுமைகளை நான் வெளியே சொன்னபோது, யாருமே எனக்கு ஆதரவு தரவில்லை. சில நடிகைகள் என்னை விமர்சித்தார்கள். தற்போது போதை வழக்கில் நடிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு 'பார்ட்டி'யில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரிய இடம். ஆனால் அவர்களை பற்றி பெரியளவில் எனக்கு தெரியாது.
மது மற்றும் போதைப்பொருளின் பிடியில் நடிகர்கள் தாண்டி நடிகைகளும் சிக்கி இருக்கிறார்கள். சருமம் மிளிர வேண்டும் என்பதற்காகவும், மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், பசி-சோர்வு வரக்கூடாது என்பதற்காகவும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சொல்வார்கள். நான் அப்படி இல்லை. எப்போது கூப்பிட்டாலும் ரத்த பரிசோதனைக்கு வருவேன்.
பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையில் நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னேன். ஆனால் கடைசியில் நான் குற்றவாளியாகி நிற்கிறேன். உண்மையை சொல்லி போராடிய எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு அநியாயம் செய்தவர்களை 'கர்மா' இப்போது தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலருக்கும் அது நடக்கும். அதையும் கண்கூடாக பார்ப்பேன் என்றார்.
- நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
- ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.
நடிகர்கள் மீது பாலியல் புகார் சொல்லி தெலுங்கு பட உலகை கலங்கடித்த நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.
தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்து ஸ்ரீரெட்டி கூறும்போது, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். நான் எனது சமூக வலைத்தளங்களளில் எந்த பதிவையும் நீக்க போவது இல்லை. உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.













