என் மலர்

  சினிமா

  எம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
  X

  எம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #SriReddy
  தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

  தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி இருந்தார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் அவரே நடிக்கிறார்.

  இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

  ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் “மீ டூ” என்ற ஹேஸ்டேக்கில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதில் தான் ஸ்ரீரெட்டியும் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவருக்கு பின்னால் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.

  மேலும் பல பெண்களை வரவழைத்து அவர் பாலியல் தொந்தரவு செய்தார். நாங்கள்தான் அரசாங்கம். நாங்கள் நினைத்தால் எந்த முன்னணி நடிகரையும் எனது படத்தில் நடிக்க வைக்க முடியும் என்றார். அவர் என்னிடம் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் கூறினார். நான் மேலும் பலரது பெயர்களை ‘மீ டூ’ வில் வெளியிட இருக்கிறேன்.

  இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

  ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டை டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி மறுத்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் கூறும் போது “ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரை சந்தித்ததோ அல்லது பேசியதோ கிடையாது. சரியான நேரத்தில் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்குவேன். தற்போது இதற்கு மேல் எதுவும் கூற இயலாது” என்றார்.
  Next Story
  ×