என் மலர்

  சினிமா

  ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்
  X

  ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டிக்கு, தற்போது முன் பணம் கொடுத்து அடுத்த படத்தில் நடிக்க அவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். #SriReddy
  தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

  தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி இருந்தார். இதில் ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்கள் என்று கூறியிருந்தார்.  இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எனக்கு பட வாய்ப்பு கொடுத்திருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘எனது நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறேன். நான் லாரன்சை நேரில் சந்தித்தேன். என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்டார். அவருடன் குழந்தைகளும் இருந்தார்கள். அவர்கள் எனக்காக பிராத்தனை செய்தார்கள். அதன்பின் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி முன் பணம் கொடுத்தார் லாரன்ஸ். இந்த பணத்தை சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுலம் பகுதி மக்களுக்கு கொடுக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார். 
  Next Story
  ×