என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா, லேடிஸ் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை?- ஸ்ரீரெட்டி
    X

    'லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா, லேடிஸ் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை?- ஸ்ரீரெட்டி

    • சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி என்னை நானே பலியிட்டு கொண்டேன்.
    • படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன்.

    நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சினிமாவில் முன்னேற, செய்ய வேண்டியதை செய்துதான் வரவேண்டியது இருக்கிறது. நான் 'மீ டூ' புகார் பற்றி பேசும்போது, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் கூட குரல் கொடுக்கவில்லை. போதைப்பொருள் வழக்கில் கூட வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தொழிலும், பணமும், பேரும், புகழும்தான் முக்கியம். 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா, லேடிஸ் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை?

    புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, பெரிய ஆட்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்சனைகள் குறித்து வெளியே சொல்லாதீர்கள். பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள்.

    "சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி என்னை நானே பலியிட்டு கொண்டேன். படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன். இதனால் நானே ஒரு 'யூடியூப்' சேனல் தொடங்கினேன். கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன். சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று யோசிக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் கிடக்கும் எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். 'யூடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் இப்போது எனக்கு கைகொடுக்கிறது" என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×