என் மலர்

  சினிமா

  சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - ஸ்ரீரெட்டி
  X

  சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - ஸ்ரீரெட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை என்று நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறியுள்ளார். #SriReddy
  பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவங்களை படத்தில் கொண்டு வருவதால் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்களும், இயக்குனர்களும் கலக்கத்தில் உள்ளனர். படத்தை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

  இந்த நிலையில் தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் நடிகை சுப்ரியா, இயக்குனர் நந்தினிரெட்டி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதனை வரவேற்று ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-  “எனது கனவுகள் இப்போது நிஜமாகி இருக்கிறது. சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை. ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். இதுவரை மோசமாக அழைக்கப்பட்டு வந்த நான் இந்த அறிவிப்பு மூலம் கதாநாயகி ஆகிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலியும், வேதனையும் இப்போது பறந்து விட்டது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
  Next Story
  ×