தெலுங்கு பேசும் மஞ்சும்மல் பாய்ஸ் - டிரைலர் வெளியீடு

பல்வேறு மாநில திரையரங்குகளிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ. 200 கோடிக்கும் அதிக வசூலை குவித்துள்ளது.இப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.
தெலுங்கு பேசும் மஞ்சும்மல் பாய்ஸ் - டிரைலர் வெளியீடு
Published on

சமீப காலமாக எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் "கண்மனி அன்போடு காதலன்" ஆடியோ ரீல்ஸ்-ஐ ஆக்கிரமித்துள்ளது. இப்படத்தின் எதிர்வினையாக கொடைக்கானலுக்கு இளைஞர்கள் படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ''மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற படம் மலையாள மொழியில் வெளியானது. மக்களிடையே கொண்டாடப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் கேரளாவைவிட தமிழக மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

இப்படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கினார். பல்வேறு மாநில திரையரங்குகளிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ. 200 கோடிக்கும் அதிக வசூலை குவித்துள்ளது. பல திரைப்பிரபலங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து பாராட்டினர்.

இந்திய திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இப்பொழுது தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தெலுங்கு டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளனர். இப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. எப்படி தமிழ் மக்களாலும், மலையாள மக்களாலும் கொண்டாடப்பட்டதோ, தெலுங்கு மொழியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com