தெலுங்கில் மஞ்சும்மல் பாய்ஸ்- ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது.தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தெலுங்கில் மஞ்சும்மல் பாய்ஸ்- ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உலகளவு வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மலையாள சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதம் ஆன நிலையில் இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

2005-ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த படம் மலையாளம், தமிழில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 6ம் தேதி தெலுங்கு மொழியில் இப்படம் வெளியாக உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com