மோசமான படம் மூலம் நேரம், பணத்தை வீணாக்க விரும்பவில்லை - அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜூன் 2 முறை நந்தி விருதுகளை பெற்று உள்ளார்.அல்லு அர்ஜுன் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மோசமான படம் மூலம் நேரம், பணத்தை வீணாக்க விரும்பவில்லை - அல்லு அர்ஜுன்
Published on

தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ்குர்ராம், புஷ்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

இவர் 2 முறை நந்தி விருதுகளை பெற்று உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். 2007 முதல் நடிக்க தொடங்கி 17 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்," சினிமாவில் சிறந்த நல்ல படங்கள் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும் ஒரு சில மோசமான படத்தால், பார்வையாளர்களின், நேரத்தையும், ஆற்றலையும், பணத்தையும் வீணாக்க விரும்பவில்லை" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com