12 நாட்களில் ரூ. 100 கோடி.. வசூலில் மாஸ் காட்டும் மஞ்சும்மல் பாய்ஸ்

பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
12 நாட்களில் ரூ. 100 கோடி.. வசூலில் மாஸ் காட்டும் மஞ்சும்மல் பாய்ஸ்
Published on

மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரளாவில் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் வசூலில் ரூ. 50 கோடியை கடந்த நிலையில், 12 நாட்களில் இந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.

முன்னதாக நடிகர் மோகன்லால் நடித்து வெளியான புலிமுருகன், லூசிஃபர் மற்றும் கடந்த ஆண்டு வெளியான 2018 போன்ற மலையாள மொழி படங்கள் வசூலில் ரூ. 100 கோடியை கடந்து அசத்தின. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.டி. கிரிஷ் இயக்கத்தில் வெளியான பிரேமலு படமும் விரைவில் ரூ. 100 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com