என் மலர்
சினிமா செய்திகள்

மிரள வைக்கும் காட்சிகள்..! "டைஸ் ஐரே" படத்தின் டிரெய்லர் வெளியீடு
மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவன். இவர் இயக்கிய ரெட் ரெயின், 2024ம் ஆண்டில் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் போன்ற படங்கள் வித்தியாசமான கதையம்சங்களில் அமைந்திருந்தது.
பிரம்மயுகம் படத்தை தொடர்ந்து, டைஸ் ஐரே படத்தை கூட்டாத தயாரித்துள்ளது ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்கள்.
டைஸ் ஐரே படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒரே மாதத்தில் நிறைவுப்பெற்றது.
டைஸ் ஐரே என்பது லத்தீன் மொழியின் பாடலில் வரும் வார்த்தை என கூறப்படுகிறது. இதற்கு, நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு என்பது பொருள்.
இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள பகதஙயகங், படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், 'டைஸ் ஐரே' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திகிலாக அமைந்திருக்கும் டிரெய்லரின் காட்சிகள் ரசிர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.






