பாராட்டை தொடர்ந்து வசூலை வாரி குவிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ்

பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாராட்டை தொடர்ந்து வசூலை வாரி குவிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ்
Published on

மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், மலையாளம் என இருமொழி ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் வசூலில் ரூ. 50 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

அந்த வகையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வசூல் மற்றும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. வரும் வாரங்களில் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com