மம்மூட்டியின் பிரமயுகம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
மம்மூட்டியின் பிரமயுகம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Published on

பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.

இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.

கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com