என் மலர்
நீங்கள் தேடியது "Mamita Baiju"
- தனுசுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
- D54 படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54 படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
'போர் தொழில்' என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு மமிதா பைஜு நடிக்கிறார். D54 திரைப்படற்கு ஜிவி பிரகாஷ்குமார இசையமைக்கிறார்,
இந்நிலையில், 'D54' படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், D54 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது என்று படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
- சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
- இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கருப்பு படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'சூர்யா 46' படத்தின் அப்டேட் மாலை 4.06 மணிக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
- இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார்
- முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.
மலையாள நடிகை மமிதா பைஜு தனது சமீபத்திய 'பிரேமலு' படத்தின் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்.
இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'ரெபெல்'படத்தின் மூலம் மமிதா பைஜு தமிழில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம்
வருகிற 22 -ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்தின் தற்காலிக தலைப்பு விவி-21.
முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.
- இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர்
- OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல்,காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்று வெளியாகியுள்ளது பிரேமலு படம். இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாளத்தில் குறும்படமாக வெளியான 'யூத்புல் லவ் ஸ்டோரி,' தற்போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர். இதன் மூலம் பிரேமலு படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. நாயகி மமிதா பைஜு தற்போது பேசும் பொருளாகி விட்டார்.
இத்தனை அம்சங்களுடன் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மார்ச் 29-ந் தேதி முதல் OTT-யில் இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.
- ஜி.வி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்
பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்கதாநாயகனாக நடித்த படம் 'ரிபெல்'' இந்த படத்தை ' ஸ்டூடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில், மமிதா பைஜு கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் , ஆதித்யா உள்பட பலர் நடித்து உள்ளனர்.மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது.
இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து விட்டது.மேலும் 'ரிபெல்' படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.ஜிவி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் 'ரிபெல்' படம் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்போது அறிவித்து உள்ளது.
வருகிற மார்ச்- 22 -ந்தேதி தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது என 'எக்ஸ்' தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
- சுதா கோங்ராவிடம் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த படத்தை இயக்க உள்ளார்.
- மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது
கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'டிராகன்' படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து அடுத்த படமும் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பிரேமலு படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை மமிதா பைஜூ பிரதீபுக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார்.

இறுதிச் சுற்று, சூரரை போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்ராவிடம் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த படத்தை இயக்க உள்ளார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கட்சி சேர உள்ளிட்ட பாடல்கள் மூலம் பிரபலமடைந்த சாய் அபயங்கர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியதில் உருவாகும் சூர்யா 45 படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்






