ஜி.வி.பிரகாஷின் ' ரிபெல் ' படம் 22 - ந்தேதி ரிலீஸ்

மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.ஜி.வி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்
ஜி.வி.பிரகாஷின் ' ரிபெல் ' படம் 22 - ந்தேதி ரிலீஸ்
Published on

பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்கதாநாயகனாக நடித்த படம் 'ரிபெல்'' இந்த படத்தை ' ஸ்டூடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில், மமிதா பைஜு கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் , ஆதித்யா உள்பட பலர் நடித்து உள்ளனர்.மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது.

இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து விட்டது.மேலும் 'ரிபெல்' படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.ஜிவி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் 'ரிபெல்' படம் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்போது அறிவித்து உள்ளது.

வருகிற மார்ச்- 22 -ந்தேதி தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது என 'எக்ஸ்' தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com