என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "D54"

    • இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார்.
    • இனிவரும் நாட்களில் , ‘D54’ படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்ட படக்குழு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    இந்த நிலையில், 'D54' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, படத்தின் படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதால் இனிவரும் நாட்களில் , 'D54' படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    • தனுசுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
    • D54 படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54 படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

    'போர் தொழில்' என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு மமிதா பைஜு நடிக்கிறார். D54 திரைப்படற்கு ஜிவி பிரகாஷ்குமார இசையமைக்கிறார்,

    இந்நிலையில், 'D54' படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், D54 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது என்று படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. 

    • தனுசுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
    • D54 படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54 படத்தின் சூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    'போர் தொழில்' என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.

    பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

    D54 திரைப்படற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கதைசொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

    இந்தப் படம் பெரும் பொருட்செலவில் இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்சன் திரில்லராக பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பாக வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பில், D54 ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

    இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார்.
    • இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குபேரா படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் தனுஷ் இந்தி படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இதனை தொடர்ந்து, நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாக உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்க உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ஜெயராம் மற்றும் சுராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கான பூஜைகள் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 'D54' திரைப்படம் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 'D54' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    ×