என் மலர்
சினிமா செய்திகள்

போர் தொழில் இயக்குநரின் அடுத்த சம்பவம்... தனுஷ்- மமிதா பைஜூ படத்தின் அப்டேட்
- இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார்.
- இனிவரும் நாட்களில் , ‘D54’ படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்ட படக்குழு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், 'D54' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, படத்தின் படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதால் இனிவரும் நாட்களில் , 'D54' படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






