என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ் - போர் தொழில் இயக்குநர் இணையும் படம் எப்படி இருக்கும்? ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழு
    X

    தனுஷ் - போர் தொழில் இயக்குநர் இணையும் படம் எப்படி இருக்கும்? ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழு

    • இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார்.
    • இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குபேரா படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் தனுஷ் இந்தி படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இதனை தொடர்ந்து, நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாக உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்க உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ஜெயராம் மற்றும் சுராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கான பூஜைகள் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 'D54' திரைப்படம் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 'D54' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×