விஷ்ணு விஷால் படத்தில் நாயகியாக மமிதா பைஜு

இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார்முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.
விஷ்ணு விஷால் படத்தில் நாயகியாக மமிதா பைஜு
Published on

மலையாள நடிகை மமிதா பைஜு தனது சமீபத்திய 'பிரேமலு' படத்தின் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். 

இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'ரெபெல்'படத்தின் மூலம் மமிதா பைஜு தமிழில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம்

வருகிற 22 -ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்தின் தற்காலிக தலைப்பு விவி-21.

முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில்  இணைகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com