'பராசக்தி' ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் 25வது படம் பராசக்தி. ஜன.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
'பராசக்தி' ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார்.  பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. இந்நிலையில் பராசக்தி படம் வரும் பிப்.7ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com