என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோஜ் பாஜ்பாய்"

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இந்தத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது.

    நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    கூஸ்கோர் என்றால் லஞ்சம் வாங்குபவர், பண்டட் என்பது பிரமாணரை குறிக்கும் சொல். எனவே படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

    மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனதிற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

     லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 'கூஸ்கோர் பண்டட்' ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, உத்தரப் பிரதேச காவல்துறை படக்குழுவினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

    முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் படக் குழுவினர் மீது லக்னோ காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இந்தத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பிராமண சமூகத்தை ஊழல்வாதிகளாகக் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    'பண்டட்' என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் புனைபெயர் மட்டுமே என்றும், எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸை அடுத்து , நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.

    • நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

    இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது.

    நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    கூஸ்கோர் என்றால் லஞ்சம் வாங்குபவர், பண்டட் என்பது பிரமாணரை குறிக்கும் சொல். எனவே படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

    மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனதிற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.   

    நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.  

    • 'சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை' படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி.சோலங்கி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள படம் 'சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை'. இப்படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி.சோலங்கி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வினோத் பானுஷாலியின் பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சுபர்ன் எஸ் வர்மா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த 'சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை' திரைப்படம் கடந்த மே 23ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

    சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை

    சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை

    இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் பெற்றது. இந்நிலையில் ஜீ5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 7ஆம் தேதி வெளியிடவுள்ளது. இந்த வருடத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் எனும் சாதனையும் படைத்த 'சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • 70 வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • குல்மோஹர் திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை வென்றது.

    70 வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷர்மிலா தாகூர் நடிப்பில் வெளியான குல்மோஹர் திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை வென்றது.

    இப்படத்தை ராகுல் வி சித்தெலா இயக்கினார். நடிகை ஷர்மிலா 13 வருடங்களுக்கு பின் இப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    மற்றமொழிப்படங்களான சிறந்த பஞ்சாபி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெறுகிறது BAGHI DI DHEE திரைப்படம்.

    சிறந்த ஒடியா மொழி திரைப்படமாக DAMAN திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×