ரசிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ட்ரீட்.. பிரபாஸ் நடிக்கும் 3 படங்களின் அப்டேட் வெளியீடு

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஹொம்பலே பிலிம்ஸ்.ஹொம்பலே பிலிம்ஸ் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.
ரசிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ட்ரீட்.. பிரபாஸ் நடிக்கும் 3 படங்களின் அப்டேட் வெளியீடு
Published on

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஹொம்பலே பிலிம்ஸ். கே.ஜி. எஃப் திரைப்படத்தை தயாரித்து கன்னட திரைப்படத்தை பான் இந்தியன் லெவலுக்கு கொண்டு சென்ற பெருமை ஹொம்பலே பிலிம்ஸ்-யே சாரும். அதைத் தொடர்ந்து இயக்கிய கே.ஜி.எஃப் 2, காந்தாரா ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுக்க பேசப்பட்டு  வெற்றிப்பெற்ற திரைப்படங்களாகும். ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களின் மீது எப்பொழுதும்  ரசிகர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு.

கடைசியாக ஹொம்பலே பிலிம்ஸ் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். இந்நிலையில் ஹொம்பலே பிலிம்ஸ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள் அடுத்து பிரபாஸ் நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஒன்று 2026 ஆம் ஆண்டு சலார்2 திரைப்படம், 2027 ஆம் ஆண்டு இயக்குனர் பிரஷாந்த் வர்மா இயக்க, கடைசி 3- வது படத்தை தமிழ்நாடு இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தை தொடர்ந்து ராஜா சாப், மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஹொம்பலே பிலிம்ஸ் கே.ஜி.எஃப் 3, சலார் பார்ட் 2 மற்றூம் காந்தாரா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com