என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

RCB அணியை வாங்க துடிக்கும் KGF, காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.
அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.






