மதராஸி படத்தின் ஆக்ஷன் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது.இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மதராஸி படத்தின் ஆக்ஷன் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சலமபல பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அந்த வகையில் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் BTS-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது. மதராஸி படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com