சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் புதிய ஸ்டில்ஸ் வைரல்!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது.படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் புதிய ஸ்டில்ஸ் வைரல்!
Published on

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் புதிய ஸ்டில்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com