என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teaser Release Date"

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கினார்.

    பிறகு, தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

    இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேரே இஷ்க் மே படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • ரவி தேஜா அடுத்ததாக நடித்து இருக்கும் திரைப்படம் மாஸ் ஜாதரா
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான பானு போகவரபு இயக்கியுள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர். ரவி தேஜா அடுத்ததாக நடித்து இருக்கும் மாஸ் ஜாதரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு அது மக்களின் கவனத்தை பெற்றது.

    படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பானு போகவரபு இயக்கியுள்ளார். படத்தின் இசையை பீம்ஸ் செசிரொலியோ மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான ஒலே ஒலே வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 11.08 மணிக்கு வெளியாக இருக்கிறது.

    படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் மற்றும் ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விது அய்யனா ஒளிப்பதிவை மேற்கொள்ள நவின் நூலி படத்தொகுப்பை செய்துள்ளார்.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகிறது.

    • ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கவுள்ளார்.
    • திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.

    தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    இதன் மூலம் மலையாள சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஷேன் நிகாம்.

    ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கவுள்ளார்.

    இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    அதில் பல அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், எமோஷனல், காதல் காட்சிகளின் உருவாக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


    ×