ராஜபுத்திரன் படத்தின் டீசர் வெளியீடு

ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
ராஜபுத்திரன் படத்தின் டீசர் வெளியீடு
Published on

நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜபுத்திரன். இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பாடலான "உம்மா" பாடலை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.

இந்நிலையில், ராஜபுத்திரன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com