search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vacancy"

    • இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ( சி.ஐ.டி.யூ) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் கோவிந்தராஜு, மண்டல செயலாளர் ராஜாராமன், வட்ட செயலாளர் காணிக்கராஜ், பொருளாளர் சங்கர், துணைத் தலைவர் ஆரோக்கிய சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.இந்தப் போராட்டத்தில் இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் கோட்டத் தலைவர்கள் ஆறுமுகம் , கலைச்செல்வன், கோட்ட செயலாளர்கள் சேக் அகமது உஸ்மான் உசேன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட செயலாளர்கள் அறிவழகன் நன்றி கூறினார்.

    • அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவபழனி தலைமை வகித்தார்.

    வட்டத்தலைவர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி சிறப்புறை யாற்றினார்.

    இதில் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்ற வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசி க்கப்பட்டது. பின்னர் செய்தியா ளர்களிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கோத ண்டபாணி கூறுகையில்,

    சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள்.

    அதன்படி திமுக அரசு சத்துணவு ஊழியர்களின் முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்குவோ மே என வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு மாறாக சத்துணவுத் திட்டத்தை சிதைக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்கா மல் தனியாருக்கு தரக்கூடிய நிகழ்வை இந்த பேரவை எதிர்க்கிறது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படு த்துவோம் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் சாத்தியம் இல்லை என ஒற்றை வரியில் அவையை அரசு முடித்து விட்டது.

    காங்கிரஸ் அரசு உள்ள மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் போது வாய்ப்புள்ள தமிழகம் எந்தவித கவலையும் இல்லாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சித்து கொண்டுள்ளது என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது என இந்த பேரவை கூட்டம் மாநில மையத்தை வலியுறு த்த உள்ளது என்று கூறி னார்.

    • காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    வேதாரண்யம்:

    காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும், கால முறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்பாட்டத்திற்கு வட்ட தலைவர் செல்வ ராணி தலைமை தாங்கினார்.

    முன்னாள் தலைவா் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

    சங்க பொறுப்பாளா் செந்தமிழ்செல்வி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    இதில் சத்துணவு ஊழிய ர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் சத்துணவு அமைப்பாளா் உஷா நன்றி கூறினார்.

    • கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
    • அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்தனர்.

    பேரணிக்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமையில் பேரணி நடை பெற்றது.

    இதில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் சரண்விடுப்பு, அவுட்சோர்சிங், ஒப்பந்த முறை இரத்து செய்தல் அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட தலைமையில் நடைபெறும் கோரிக்கையில் குறிப்பாக அரசாணை152-139-115ஐஇரத்துசெய்ய வேண்டும், அகவிலைபடி நிலுவை, சரண்விடுப்பு வருங்கால வைப்புநிதி வட்டிகுறைப்பு உள்ளிட்ட கொரனா தொற்றுகாலங்களில் பறிக்கபட்ட நிலுவை தொகை வழங்க வேண்டும்.

    சாலைபணியாளர்களின் 41மாத பணி நீக்ககாலத்தை வரன்முறைபடுத்த வேண்டும்.

    மாவட்ட செயலாளர் இளவரசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார் முன்னதாக மேளாண் மாநிலசெயலர் பிரேம்சந்த் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார் இதில் மாவட்ட தலைவர் தென்னரசு, மாவட்ட செயலர்கள் ஜெயராமன்.

    வெங்கடேஸ்வரன், ராமானுஜம், கணேசன், வனிதா, ராமதேவன், ரவீந்தரன், மாவட்டநிர்வாகிகள் துணை தலைவர்கள் ராமசந்திரன் ஜவஹர் லதா மாவட்ட செயலர்கள்சௌந்த ரபாண்டியன், முருகானந்தம் வெங்கடேசன், குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி நிரைவுபெற்றது நிறைவுரையை மாநில செயலர் கோதண்டபாணி உரையாற்றினார். முடிவில்.பொருளாளர் கலா நன்றி கூறினார்.

    • விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    நாகப்பட்டினம் , நாகூர் மருத்துவமனைகள், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால், விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோரை தொடர்பு கொண்டு, மேற்கூறிய மருத்துவமனைகளுக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரவு நேர சிறப்பு காவலர் பணி மேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில் இரவு நேர சிறப்பு காவலர் பணிமேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதனை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்ப டவுள்ளது. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ.8,300- வழங்கப்படுகிறது.

    இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பி க்கலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமா கவோ விண்ணப்பி க்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலை பேசி மூல மோ (04366 -290080) தொடர்பு கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூற ப்பட்டு ள்ளது.

    • 47 துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பணிகள் காலியாக உள்ளது.
    • மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடப்படுகிறது.

    விருதுநகர்

    தமிழகத்தில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலை-1 பணி காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 47 காலிபணியிடங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என உள்துறை அறிவுத்துள்ளது.

    • அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.

    வட்டார தலைவர் ரஜினி முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ஜெயராமன் கண்டன உரையாற்றினார்.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கணினி ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    • அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • 5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் லதா முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் ஷகிலாபானு அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்ட த்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கு வெயிலின் தாக்கத்தால் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும் 10வருடம் பணிபு ரிந்த பணியாளர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபார தியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாவட்ட துணை தலைவர் ராணி எலிசபெத், துணை செயலாளர் மணிமேகலை, மயிலாடுதுறை ஒன்றியம் தலைவர் சுகுணா, செய்லர் கவிதாரூத், பொருளாளர் மரகதம். செம்பனார்கோயில் ஒன்றியம் வள்ளி.

    மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியம் கிருஷ்ணவேணி, ரேவதி, மல்லிகா, குத்தாலம் ஒன்றியம் லட்சுமி, சுமதி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • பழகுநருக்கான உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    • பழகுநர் உரிமம் காலாவதியாகி விடக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூரில் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீரபாண்டி பிரிவில் செயல்பட்டு வரும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநருக்கான உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆனந்தும், மோட்டார் வாகன ஆய்வாளராக நிர்மலாதேவியும் உள்ளார்கள்.இரண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் இருக்கும் நிலையில் ஒரு ஆய்வாளர் மட்டுமே இருப்பதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பணியில் இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் விடுப்பில் சென்றால் பொதுமக்கள் பழகுநர் உரிமம் பெற முடியாத நிலை உள்ளது. மேலும் பழகுநர் உரிமம் பெறுபவர்களுக்கு ஒரு மாதம் கழித்து தேதி ஒதுக்கினால் பழகுநர் உரிமம் காலாவதியாகி விடக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே மோட்டார் வாகன ஆய்வாளர் காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஷகிலா பானு தலைமை தாங்கினார்.

    அப்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை கள் வலியுறுத்தி செம்பனார்கோ வில் ஒன்றியத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அங்க ன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதிய சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் வள்ளியம்மாள், செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
    • 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்த முகாமில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு, 04362- 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×