search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மயிலாடுதுறையில், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • 5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் லதா முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் ஷகிலாபானு அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்ட த்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கு வெயிலின் தாக்கத்தால் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும் 10வருடம் பணிபு ரிந்த பணியாளர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபார தியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாவட்ட துணை தலைவர் ராணி எலிசபெத், துணை செயலாளர் மணிமேகலை, மயிலாடுதுறை ஒன்றியம் தலைவர் சுகுணா, செய்லர் கவிதாரூத், பொருளாளர் மரகதம். செம்பனார்கோயில் ஒன்றியம் வள்ளி.

    மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியம் கிருஷ்ணவேணி, ரேவதி, மல்லிகா, குத்தாலம் ஒன்றியம் லட்சுமி, சுமதி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    Next Story
    ×