நாகை ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்- எம்.எல்.ஏ. கோரிக்கை

விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது.காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை.
ஷாநவாஸ் எம்.எல்.ஏ. 
ஷாநவாஸ் எம்.எல்.ஏ. 
Published on

நாகப்பட்டினம்:

ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நாகப்பட்டினம் , நாகூர் மருத்துவமனைகள், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால், விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோரை தொடர்பு கொண்டு, மேற்கூறிய மருத்துவமனைகளுக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com