search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ரூ.212 கோடி செலவில் குடிநீர் திட்டப்பணிகள்
    X

    குமரி மாவட்டத்தில் ரூ.212 கோடி செலவில் குடிநீர் திட்டப்பணிகள்

    • அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
    • குமரி மாவட்டத்தில் குடிநீரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குமரி மாவட்டத்தில் ரூ.212 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா காட்டாத்துறை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்தது.

    விழாவுக்கு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்றார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    அந்த வகையில் ரூ.174 கோடியில் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள், பயன்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம், காட்டாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் அபிவிருத்தி செய்தல் மற்றும் பொதுவான சுத்திகரிகப்பு நிலையம் அமைக்கும் கூட்டுகுடிநீர் திட்டம், ரூ.30.94 கோடியில் குழித்துறை நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.3.69 கோடியில் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள 3 குடியிருப்பு களுக்கான குடிநீர் திட்டம், ரூ.3.52 கோடியில் தூத்தூர் ஊராட்சியில் 5 ஊராட்சிகளுக்கான குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.212 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகள் உள்ளன. மாநிலத்திலேயே 6 சட்டசபை தொகுதிகளில் 51 பேரூராட்சிகள் இருப்பது இங்கு தான். இங்கு 24 மாதங்களில் ரூ.1351.14 கோடி செலவு செய்ய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி தந்துள்ளார். நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.131.38 கோடியும், 4 நகராட்சிகளுக்கு ரூ.57.50 கோடியும், 51 பேரூராட்சிகளுக்கு ரூ.524.9 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 638.17 கோடியும் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சாலையை அகலப் படுத்தும் போது குடிசைகளை அகற்ற கூடாது என்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறி யுள்ளார். எனவே சாலையை அகலப்படுத்தும் போது அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று வீடு தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளோம். குமரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரம் அதிகம் இருக்கிறது. ஆனால் அதை செயல் படுத்தும் போது பல்வேறு சிரமங்கள் உள்ளன. இங்கு மேடு, பள்ளங்கள் அதிகம் உள்ளன. சாலையை சீரமைக்கும்போது குடிநீர் குழாய்கள் சேதம் அடைகிறது.

    எனவே சிரமங்களை நீக்கி குமரி மாவட்டத்தில் குடிநீரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றபோது குடிநீர் வழங்கல் துறை 26-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த துறை இந்தியாவில் முதல் இடம் பிடித்துள்ளது. அதற்கான விருதை வாங்கி வந்துள்ளோம்.

    குமரி மாவட்டத்தில் கையளவு இடம் கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால் தற்போது மலையில் அருமையாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இடம் கொடுக்கப்பட் டுள்ளது. குறைவான செல வில் நிறைவான திட்டமாக இந்த திட்டம் உருவாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி னார். முன்னதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது, குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எதையும் போராடிதான் பெற வேண்டிய நிலை இருந்தது. போராடியதால் என் மீது 30 வழக்குகள் போடப் பட்டுள்ளன. ஆனால் தற்போது அப்படி இல்லை. குமரி மாவட்டத்துக்கு கேட்கின்ற நிதியை முதல்-அமைச்சர் அளித்து வரு கிறார். விரைவில் தன்னி றைவு பெற்ற மாவட்டமாக குமரி மாவட்டம் உருமாறும்" என்றார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குர்ராலா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், குழித் துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×