search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarath Pawar"

    • மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
    • மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம்
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் சரத் பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய ராகுல்காந்தி, "மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளின் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை.

    விவசாயிகள் தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் விவசாயிகளின் குறைகளை தீர்க்க பாஜக அரசுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பாஜக அரசு தவறி விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம்.

    அதானி 18 சதவீத ஜி.எஸ்.டி செலுத்துகிறார். அதே சமயம் விவசாயிகள் கூட ஜி.எஸ்.டி செலுத்துகின்றனர். ஜி.எஸ்.டி மட்டுமில்லாமல், விவசாயிகள் பல்வேறு வகையான வரிகளால் சிரமப்படுகின்றனர். இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக குறைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஏதேனும் ஒரு வரி மட்டும் செலுத்துவதை உறுதிசெய்வோம். மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

    • அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி.
    • பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சரானர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்திருக்கிறார். இதனால், அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

    இதன்படி, கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

    நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு, அணியின் பெயரை தேர்ந்தெடுக்கும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார்.

    இதன்படி, வருகிற 7-ந்தேதி பிற்பகல் 3 மணிக்குள், அவர்களுடைய அணியின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி, கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

    கடந்தாண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சரானர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் இஸ்வர்லால் ஜெயின். இவர் சரத்பவாரின் உதவியாளர் ஆவார்.

    வங்கியில் ரூ.353 கோடி கடன் வாங்கி விட்டு அதை செலுத்தாமல் மோடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி.யான இஸ்வர்லால் ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஜல்கான், நாசிக், தானே ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 39 கிலோ தங்க வைர நகைகள் மற்றும் ரூ.1.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    • அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போலவே தெரிகிறது.
    • இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுமத்தை குறிவைத்து தாக்குவது போல் ஹிண்டனர்க் அறிக்கை அமைத்திருக்கிறது.

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மேலும் பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பினர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை. இதுபோன்ற அறிக்கைகள் இதற்கு முன்பாகவும் சில தனிநபர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்திலும் சில நாட்கள் கடும் அமளி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்திற்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போலவே தெரிகிறது. இதுபோன்ற பிரச்னைகள் எழுப்பப்படும்போது, நாட்டில் சலசலப்பை உண்டாக்குகிறது. செலவு ஏற்படுகிறது. பொருளாதாரத்தை பாதிக்கிறது.

    இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுமத்தை குறிவைத்து தாக்குவது போல் ஹிண்டனர்க் அறிக்கை அமைத்திருக்கிறது. அப்படி ஏதேனும் அவர்கள் தவறு செய்திருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓட்டு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் கூறியுள்ளார். #SharadPawar #PMModi

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் தேர்தல் பிரசாரம் செய்ய சதாரா வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டு எந்திரங்களில் குளறுபடி நடைபெறுவதாக ஏற்பட்ட புகாரை தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு ஆந்திரா மற்றும் குஜராத்தில் நிபுணர்கள் மூலம் பரிசோதனை நடத்தி காட்டப்பட்டது. அதில் நான் கலந்து கொண்டேன்.

    அப்போது ஓட்டுகள் பா.ஜனதா கட்சிக்கு சென்றதை நான் நேரில் பார்த்தேன். எந்திரத்தில் ஓட்டு போடும் பட்டனை நான் அழுத்தினேன். ஆனால் நான் போட்ட ஓட்டு தாமரைக்கு சென்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது.

    எனவே ஓட்டு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து ஓட்டு எந்திரங்களிலும் தவறு நடைபெறும் என சொல்லவில்லை. ஆனால் குளறுபடிகள் மற்றும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது.


     

    இந்த விவகாரம் குறித்து சில எதிர்க்கட்சிகள் கோர்ட்டில் முறையிட்டன. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

    ராஜீவ் காந்திக்கு எதிராக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் துரதிர்ஷ்டவசமானது. நிரூபிக்க முடியாது. அவரது குடும்பம் நாட்டுக்காக பெரிய தியாகம் செய்துள்ளது. 2 தியாகிகளை நாட்டுக்கு தந்துள்ளது. எனவே அந்த குடும்பம் பற்றிய கருத்துக்களை மோடி மிக கவனமாக பேச வேண்டும்.

    விடுமுறையை கழிக்க இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க் கப்பலை ராஜீவ் காந்தி தவறான முறையில் பயன்படுத்தினார் என மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ராணுவ கப்பலை பயன்படுத்தியதில் ஆட்சே பனை எதுவுமில்லை.

    ராணுவ மந்திரியாக இருந்த போது போர்க்கப்பலில் நான் அந்தமான் சென்று இருக்கிறேன். அது கடலில் தான் பயணம் செய்கிறது. பிரதமராக இருப்பவர் அதை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

    இவ்வாறு சரத்பவார் கூறினார். #SharadPawar #PMModi

    ×