search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மகாராஷ்டிரா: பாஜக எம்.பி  உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்ரே கட்சியில் இணைந்தார்
    X

    மகாராஷ்டிரா: பாஜக எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்ரே கட்சியில் இணைந்தார்

    • மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
    • மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    Next Story
    ×