search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 person home"

    • கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
    • சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்

    நெல்லை:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 45 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அமலாக்கத்துறை சோதனை

    இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் அமலாக்கப்பிரிவு போலீசார்அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக மொத்தம் 2 குழுக்கள் இன்று அதிகாலை நெல்லை வந்தடைந்த நிலையில், அதில் ஒரு குழு மாநகர போலீஸ் அதிகாரிகளிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டது.

    அதன் அடிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அமலாக்கப்பிரிவினருக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த குழு டவுன் கல்லணை தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவர் வீட்டில் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

    பண பரிமாற்றம்

    இந்த சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சதாம் உசேன் நெல்லையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த குழுவில் சில அதிகாரிகள் பாளை ஆயுதப்படை பின்புறம் உள்ள பெருமாள்புரம் செயின்ட் பால்ஸ் நகரில் ராஜ்குமார் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அமலாக்கத்துறை யின் மற்றொரு குழுவானது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×