என் மலர்
நீங்கள் தேடியது "Money transfer"
- இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்த்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தும் UPI பணபரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா UPI–UPU ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன்மூலம் 192 நாடுகளில் UPI பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியும். விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் மோசடிகளை தடுக்க முடியும் என்று NPCI தெரிவித்துள்ளது.
UPI பணப்பரிவர்த்தனையில் இருக்கும் 'Request Money' அம்சத்தை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நிரந்தரமாக நீக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மோசடிகளை தடுக்கவும் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
- ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) நாளை (ஆகஸ்ட் 1) முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது.
பேலன்ஸ் சரிபார்ப்பதற்கான கட்டுப்பாடு:
GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
வங்கி கணக்கு விவரங்களை பார்ப்பதற்கான கட்டுப்பாடு:
உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
ஆட்டோபே பரிவர்த்தனைகளுக்கு நேர கட்டுப்பாடு:
இனிமேல், ஆட்டோபே பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் எந்நேரத்திலும் நடைபெறுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயலாக்கப்படும்.
கட்டண நிலையை பார்ப்பதற்கான வரம்பு:
ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும்.
- டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80% க்கும் அதிகமானவை UPI மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
- PIN நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது.
PIN நம்பருக்கு பதிலாக பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது UPI பணபரிவர்தனைக்கு PIN நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை தவிர்த்து கைரேகை, முக அடையாள வசதிகளுடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80% க்கும் அதிகமானவை UPI மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
PIN நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது. பயோமெட்ரிக் முறை இந்த சிக்கல்களை தீர்க்கலாம். ஆகவே PIN நம்பர் முறையை விட இது பாதுகாப்பானதாக இருக்கலாம் ன்று கூறப்படுகிறது.
இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது.
- யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் இன்று முதல் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முக்கிய UPI API-களுக்கான பதிலளிக்கும் நேரம் (response time) குறைக்கப்பட்டுள்ளது.
Failed Transaction சமயங்களில் பணம் Deduct ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும், Transaction Reversal நேரமும் 30 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பணப்பரிவர்த்தனைகளை விரைவாகவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் (PSPs) இந்த புதிய நேர வரம்புகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதனால், பணப்பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறையும், மேலும் பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யப்படும்.
இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை (Technical Decline) அதிகரிக்காமல் இருக்க NPCI வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+2
- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
- சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லை:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 45 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை
இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் அமலாக்கப்பிரிவு போலீசார்அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக மொத்தம் 2 குழுக்கள் இன்று அதிகாலை நெல்லை வந்தடைந்த நிலையில், அதில் ஒரு குழு மாநகர போலீஸ் அதிகாரிகளிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டது.
அதன் அடிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அமலாக்கப்பிரிவினருக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த குழு டவுன் கல்லணை தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவர் வீட்டில் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
பண பரிமாற்றம்
இந்த சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சதாம் உசேன் நெல்லையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த குழுவில் சில அதிகாரிகள் பாளை ஆயுதப்படை பின்புறம் உள்ள பெருமாள்புரம் செயின்ட் பால்ஸ் நகரில் ராஜ்குமார் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அமலாக்கத்துறை யின் மற்றொரு குழுவானது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது.
- பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் பொன்ஜனகன் (வயது 17).இவர் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவன் பொன்ஜனகன் மாலையில் டியூசன் முடித்து விட்டு நிலக்கோட்டை நால்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பணப்பை கிடந்தது. அந்த பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது. இதை பார்த்த மாணவன் அதனை நிலக்கோட்டை நால் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
உடனடியாக பள்ளி மாணவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்திடம் இது குறித்து போலீசார் தெரிவித்தனர். மாணவனின் இந்த செயலை பாராட்டிய நிலகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர். மேலும் தவற விட்ட பணப்பை மற்றும் செல்போன் யாருடையது என்று விசாரணை நடத்தியதில் துரைசாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவரவே அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவரும் பள்ளி மாணவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.
- மார்ச் மாதத்தில் யு.பி.ஐ பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு யுபிஐ பணப் பரிமாற்ற சேவை மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
யுபிஐ சேவை மக்கள் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனை முதன்மையாக திகழ்கிறது.

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்துவது புதிய உச்சம் அடைந்துள்ளது, இணையத்தில் வளர்ந்து வரும் வியாபார பரிவர்த்தனைக்காக இதன அதிக அளவில் மக்கள் பயன் படுத்துகிறார்கள்.
UPI என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமெண்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

இந்தியாவில் சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு UPI பேமெண்ட் முறை தற்போது மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
இந்நிலையில் யு.பி.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.14,000 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் யு.பி.ஐ மூலமான பண பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
மேலும் யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புவது தற்போது குறைந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- 75சதவீத மக்கள் UPI பிற டிஜிட்டல் பேமெண்ட் அதிகசெலவு செய்தனர் என ஆய்வில் தெரியவந்தது
- இந்த ஆண்டு ஏப்ரல் மாத கணக்கெடுப்பு படி UPI மூலம் ரூ.19.64 லட்சம் கோடி பரிவர்த்தனை நடந்தது
டிஜிட்டல் யுகத்தில் தற்போது ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு யுபிஐ பணப் பரிமாற்ற சேவை மிகவும் உதவியாக அமைந்துள்ளது. யுபிஐ சேவை மக்கள் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனை முதன்மையாக திகழ்கிறது. இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்துவது புதிய உச்சம் அடைந்துள்ளது,

இணையத்தில் வளர்ந்து வரும் வியாபார பரிவர்த்தனைக்காக இதனை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் செழிக்க பணத்தை செலவழிப்பது ஒரு முக்கிய அங்கமாகும்.
டிஜிட்டல் பணம் மக்களுக்கு நிறைய நன்மைகளை கொண்டுவந்துள்ளதன் மூலம் எளிதாக தொழில் செய்ய முடியும். எல்லா இடங்களிலும் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. பெரும்பாலான மக்கள் பணத்தை விட டிஜிட்டல் மூலம் அதிகம் செலவிடுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி டெல்லி) ஆய்வு நடத்தியுள்ளது. இதில் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலம் முன்பை விட பணப் பரிவர்த்தனை மிகவும் எளிமையாகி உள்ளன.
ரொக்கமில்லா பரிவர்த்தனையால் 'அதிகச் செலவு' காரணமாக பல தனிநபர்கள் தங்கள் பாக்கெட்டுகளை 'காலியாக்கி உள்ளனர். இந்தியாவில் சுமார் 75 சதவீத மக்கள் UPI மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக அதிகமாகச் செலவு செய்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு படி UPI மூலம் ரூ.19.64 லட்சம் கோடி மதிப்பில் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 50 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.






