GPay, PhonePe, Paytm பயனாளர்களின் கவனத்திற்கு... நாளை முதல் புதிய UPI விதிமுறைகள் அமல்

யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும் ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
GPay, PhonePe, Paytm பயனாளர்களின் கவனத்திற்கு... நாளை முதல் புதிய UPI விதிமுறைகள் அமல்
Published on

தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) நாளை (ஆகஸ்ட் 1) முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது.

பேலன்ஸ் சரிபார்ப்பதற்கான கட்டுப்பாடு:

GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்

வங்கி கணக்கு விவரங்களை பார்ப்பதற்கான கட்டுப்பாடு:

உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.

ஆட்டோபே பரிவர்த்தனைகளுக்கு நேர கட்டுப்பாடு:

இனிமேல், ஆட்டோபே பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் எந்நேரத்திலும் நடைபெறுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயலாக்கப்படும்.

கட்டண நிலையை பார்ப்பதற்கான வரம்பு:

ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com