UPI பணப்பரிவர்த்தனையின் நேரம் குறைப்பு- இன்று முதல் அமல்

யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது.யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
UPI பணப்பரிவர்த்தனையின் நேரம் குறைப்பு- இன்று முதல் அமல்
Published on

யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் இன்று முதல் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முக்கிய UPI API-களுக்கான பதிலளிக்கும் நேரம் (response time) குறைக்கப்பட்டுள்ளது.

Failed Transaction சமயங்களில் பணம் Deduct ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும், Transaction Reversal நேரமும் 30 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் பணப்பரிவர்த்தனைகளை விரைவாகவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் (PSPs) இந்த புதிய நேர வரம்புகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதனால், பணப்பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறையும், மேலும் பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யப்படும்.

இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை (Technical Decline) அதிகரிக்காமல் இருக்க NPCI வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com