என் மலர்
நீங்கள் தேடியது "யுபிஐ பண பரிவர்த்தனை"
- கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
- நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
சென்னை:
யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.
இந்த உயர்த்தப்பட்ட பரிவர்த்தனை வரம்பு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
- கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
இதனை தொடர்ந்து, யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பயனர்கள் பாதிப்படுவார்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில், கட்டுப்பாடுகள் அமலான மறுநாளே யுபிஐ வரலாற்றில் புதிய உச்சமாக அதாவது ஆகஸ்ட் 2-ந்தேதி 70.7 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய பேமண்ட் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் சராசரியாக தினமும் 65 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக கூறும் NPCI அடுத்தாண்டு தினசரி 100 கோடி பரிமாற்றங்கள் என்ற நிலை உருவாகும் என கணித்துள்ளது.
- அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
- இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது பெட்டிக்கடை தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
ஆனால் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அஞ்சல் அலுவலகங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் போஸ்ட் ஆபீசில் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
முன்னதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த தபால் நிலையங்களில் QR குறியீடு அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் காரணமாக, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து மீண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
- யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது.
- யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் இன்று முதல் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முக்கிய UPI API-களுக்கான பதிலளிக்கும் நேரம் (response time) குறைக்கப்பட்டுள்ளது.
Failed Transaction சமயங்களில் பணம் Deduct ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும், Transaction Reversal நேரமும் 30 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பணப்பரிவர்த்தனைகளை விரைவாகவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் (PSPs) இந்த புதிய நேர வரம்புகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதனால், பணப்பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறையும், மேலும் பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யப்படும்.
இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை (Technical Decline) அதிகரிக்காமல் இருக்க NPCI வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
- பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை.
2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை.
2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது.
யுபிஐ வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.
யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை.
ஆனால் இனி வரும் காலத்தில் யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் ரூ.600 கோடி பரிவர்த்தனை.
- யுபிஐ சேவை நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தல்.
வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் யுபிஐ முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில் ஆன் லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. யுபிஐ மூலமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களிடம் கருத்து கோர உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை சேவை தொடர்பான குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.






