என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுபிஐ வசதி"

    • குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
    • நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யு.பி.ஐ. என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.

    மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையாக யு.பி.ஐ. உள்ளது. இந்தநிலையில் கண் பாா்வையற்ற மற்றும் கல்வியறிவில் குறைந்த வாடிக்கையாளர்களுக்காக குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.

    இதற்காக நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    • கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
    • தனிநபர் பண பரிவர்த்தனை ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.

    இன்று முதல் UPI மூலம் பொருட்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான வரம்பு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.

    தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.

    • அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
    • இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்தியாவில் தற்போது பெட்டிக்கடை தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

    ஆனால் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அஞ்சல் அலுவலகங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

    இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இனிமேல் போஸ்ட் ஆபீசில் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    முன்னதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த தபால் நிலையங்களில் QR குறியீடு அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் காரணமாக, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து மீண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வரவுள்ளது. 

    • எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது.
    • எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்பு.

    எச்.டி.எப்.சி வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் சேவை பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்களுக்கு தலா இரண்டு மணி நேரத்திற்கு யுபிஐ உள்ளிட்ட சேவைகள் இயங்காது என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

    அதன்படி, நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

    இந்த பராமரிப்பு காலத்தில் எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரூபே (Rupay) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் அப் பே, பேடிஎம், மொபிக்கிவிக் உள்ளிட்ட சேவைகளும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, பராமரிப்புப் பணியின்போது எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • ரேஷன் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகமாகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×