என் மலர்
இந்தியா

குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
- குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
- நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யு.பி.ஐ. என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையாக யு.பி.ஐ. உள்ளது. இந்தநிலையில் கண் பாா்வையற்ற மற்றும் கல்வியறிவில் குறைந்த வாடிக்கையாளர்களுக்காக குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதற்காக நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Next Story






