search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Transaction"

    • ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
    • டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

    2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.

    அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.

    ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

    டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.

    • வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்
    • அரக்கோணத்தில் தகவல் பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாரத பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய 'க்யூ ஆர் கோடு' தகவல் பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.

    நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, நகரமன்ற துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் ஆகியோர் சாலையோர வியாபாரிகளுக்கு 'க்யூ ஆர் கோடு' தகவல் பலகையினை வழங்கினர்.

    இதில் தி.மு.க. நகரமன்ற குழு தலைவர் துரை சீனிவாசன், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் உள்படசாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாகவும் இது தனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். #BanwarilalPurohit #ViceChancellors
    சென்னை:

    சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



    தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தில்  முறைகேடு நடந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்து, அதை மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையில்தான் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆளுநரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #BanwarilalPurohit #ViceChancellors
    ×