என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "time reduction"

    • யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது.
    • யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் இன்று முதல் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முக்கிய UPI API-களுக்கான பதிலளிக்கும் நேரம் (response time) குறைக்கப்பட்டுள்ளது.

    Failed Transaction சமயங்களில் பணம் Deduct ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும், Transaction Reversal நேரமும் 30 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்கள் பணப்பரிவர்த்தனைகளை விரைவாகவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் (PSPs) இந்த புதிய நேர வரம்புகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதனால், பணப்பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறையும், மேலும் பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யப்படும்.

    இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த மாற்றங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை (Technical Decline) அதிகரிக்காமல் இருக்க NPCI வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

     மதுரை

    செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைப்பது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சியில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்கு பதிலாக, 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு பதிலாக மாலை 4.25 மணிக்கு, 45 நிமிடங்கள் முன்பாகவே செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×