என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Athletics Championships"

    • இரவில் மழை பெய்ததால் போட்டிகள் தாமதமாக நடந்தது.
    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது.

    சென்னை:

    மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மராட்டியத்தின் தேஜஸ் ஷிர்ஸ் தங்கப்பதக்கமும் (13.60 வினாடி), தமிழகத்தின் மனவ் வெள்ளிப்பதக்கமும் (14.03 வினாடி) வென்றனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் தமிழகத்துக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. சென்னையை சேர்ந்த நந்தினி 13.45 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்தார். மேற்கு வங்காளத்தின் மவுமிதா மோண்டல் தங்க மங்கையாக (13.22 வினாடி) ஜொலித்தார்.

    இரவில் மழை பெய்ததால் போட்டிகள் தாமதமாக நடந்தது. பெண்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பவித்ரா, ஏஞ்சல் சில்வியா, அபினயா, தனலட்சுமி ஆகியோர் அடங்கிய தமிழக அணியினர் 44.73 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டிப்பிடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர்.

    கர்நாடகா வெள்ளிப்பதக்கத்தை (45.34 வினாடி) வசப்படுத்தியது. இதன் ஆண்கள் பிரிவில் ஒடிசாவிடம் பின்தங்கிய அருண், ராகுல் குமார், வருண் மனோகர், தமிழரசு ஆகியோரை கொண்ட தமிழக அணியினர் 2-வது இடம் (39.80 வினாடி)பிடித்தனர். 4x400 மீட்டர் கலப்புதொடர் ஓட்டத்தில் தமிழகம் வெண்கலம் பெற்றது.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் டாப்-2 இடங்களை கேரளாவின் கார்த்திக், அப்துல்லா அபூபக்கர் பிடித்த நிலையில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 16.35 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் ஆண்கள் பிரிவில் கேரளாவின் பிலின் ஜார்ஜ் ஆண்டோவும் (1 மணி 29 நிமிடம் 35.12 வினாடி). பெண்கள் பிரிவில் அரியானாவின் ரவினாவும் (1 மணி 35 நிமிடம் 13.49 வினாடி) மகுடம் சூடினர். தமிழகத்தின் மோகவி முத்துரதினா வெண்கலப்பதக்கத்தை (1 மணி 41 நிமிடம் 34.72 வினாடி) கைப்பற்றினார்.

    தமிழக அணிக்கு இதுவரை 8 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம்19 பதக்கம் கிடைத்துள்ளது.

    • தடகள போட்டியை தமிழகம் நடத்துவது இது 12-வது முறையாகும்.
    • கடைசியாக 2022-ம் ஆண்டில் இங்கு சீனியர் தேசிய தடகள போட்டி நடந்தது.

    தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் எஸ்.டி.ஏ.டி. ஆதரவுடன் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் இடத்தை எதிர்நோக்கி உள்ள குறிப்பிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு இது அணித் தேர்வுக்கான கடைசி போட்டியாகவும் அமைந்திருப்பதால் அந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது போன்ற கவுரவமிக்க தடகள போட்டியை தமிழகம் நடத்துவது இது 12-வது முறையாகும். கடைசியாக 2022-ம் ஆண்டில் இங்கு சீனியர் தேசிய தடகள போட்டி நடந்தது.

    5 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர், 800 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் உள்ளிட்ட பந்தயங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் ஆசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஓட்டப்பந்தய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், 18 வயதான அபினயா, ஏஞ்சல் சில்வியா ஆகிய தமிழர்களும் அடங்குவர்.

    தமிழகத்தை தவிர்த்து, ஆசிய விளையாட்டில் இரட்டை சாம்பியனும், ஒலிம்பியனுமான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (பஞ்சாப்), ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டெல்லியை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல்), முன்னாள் ஆசிய சாம்பியனான கேரளாவின் டிரிபிள் ஜம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், கார்த்திக் உன்னிகிருஷ்ணன், முரளி ஸ்ரீசங்கர் மற்றும் அம்லான் போர்கோஹைன் (அசாம்), பிரக்யான் சாகு (ஒடிசா), தேஜஸ் ஷிர்ஸ் (மகாராஷ்டிரா) உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களும் களம் இறங்குகிறார்கள்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந்திரன், செயலாளர் சி.லதா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.
    • இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும்.

    பஞ்ச்குலா:

    மாநிலங்களுக்கு இடையிலான 63-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் அரியானாவைச் சேர்ந்த கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும். இதை அடைந்த விட்ட கிரண் பஹல் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார்

    'ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதை விட பெரிய சாதனை எதுவும் கிடையாது' என்று 23 வயதான கிரண் பஹல் நெகிழ்ந்தார்.

    ×