ஆசிய இறகுப்பந்தாட்ட போட்டிக்கு விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி தேர்வு

தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டியில் மாணவி ரேஷிகா தங்க பதக்கம் பெற்றார்.ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக ரேஷிகா தேர்வு பெற்றுள்ளார்.
ஆசிய இறகுப்பந்தாட்ட போட்டிக்கு விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி தேர்வு
Published on

நெல்லை:

தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.

இதன் மூலம் அடுத்த மாதம் சீனாவில் 17-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக தேர்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர். திருமாறன், முதல்வர் முருகவேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com