search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sword Fighting Competition"

    • 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அனைவரும் பங்கு பெறும் அளவிலான வாள் சண்டை தேர்வு போட்டி வருகிற 30-ந் தேதி களரம்படியில் நடைபெறுகிறது.
    • இந்த போட்டியில் எப்பி, சேபர், பாயில் போன்ற 3 விதமாக போட்டிகள் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அனைவரும் பங்கு பெறும் அளவிலான வாள் சண்டை தேர்வு போட்டி வருகிற 30-ந் தேதி களரம்படியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்பி, சேபர், பாயில் போன்ற 3 விதமாக போட்டிகள் நடைபெறும்.

    இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் 6-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்த போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் 1-1-2007-க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.

    இதற்கு தகுந்த பள்ளி சான்றிதழ் அல்லது ஆதார் கார்டு, பிறந்த தேதி சான்றிதழ் இருக்க வேண்டும். மாவட்ட தேர்வில் பங்கு பெற இருக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு வர வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவலை வாள்சண்டை சங்கத் தலைவர் கோசலம், செயலாளர் வக்கீல் வஸ்தாத் கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி பாளையங்கோட்டை புனித இன்னாசியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • பாயில் அணி போட்டியில் சந்தோஷ் குமார், சுகுல், அசுகவி முகேந்திரவாசு ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    நெல்லை:

    நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி பாளையங்கோட்டை புனித இன்னாசியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பாயில் அணி போட்டியில் சஞ்சய், லெஷ்மன் பரணி, தரண், ஸ்ரீ மகா தேவன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

    17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் சேபர் தனிநபர் போட்டியில் கௌது வருசை முகம்மது தங்க பதக்கம் வென்றார். சேபர் அணி போட்டியில் ஸ்ரீ ஹரிஹரன், செல்வ ராகுல், கௌது வருசை முகம்மது, முகமது நதீம் ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். பாயில் அணி போட்டியில் சந்தோஷ் குமார், சுகுல், அசுகவி முகேந்திரவாசு ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    எப்பி அணி போட்டியில் சஞ்சய், இசக்கி சரவண குரு, சிவ சண்முகம் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் எப்பி தனிநபர் போட்டியில் ஆகாஷ் கிருஷ்ணா தங்க பதக்கம் வென்றார். எப்பி அணி போட்டியில் சாம்சன் டேவிட், ஆகாஷ் கிருஷ்ணா, சஞ்சய் குமார், ராஜா சிவசுப்பிர மணியன் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பாயில் தனிநபர் போட்டியில் கண்மணி, ஹரீஷ்மா வெங்கலப்பதக்கம் வென்றனர். பாயில் அணி போட்டியில் கண்மணி, ஹரீஷ்மா, நித்திய ஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருக வேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×