search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தந்தையை வெட்டி கொன்று கத்தியுடன் காதலி வீட்டுக்கு சென்ற வாலிபர்
    X

    தந்தையை வெட்டி கொன்று கத்தியுடன் காதலி வீட்டுக்கு சென்ற வாலிபர்

    • தந்தையின் கழுத்தை அறுத்த ரத்த கறை படிந்த கத்தியுடன் தனது காதலி வீட்டுக்கு சென்ற நரசிம்மலு காதலுக்கு இடையூறாக இருந்த தனது தந்தையை வெட்டி கொலை செய்து விட்டதாக தெருவில் நின்று சத்தமிட்டார்.
    • நரசிம்மலுவின் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் நரசிம்மலு நின்று கொண்டு இருந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கோசுகி நாகண்ணா காலனியை சேர்ந்தவர் வீரய்யா (வயது 45). இவரது மகன் நரசிம்மலு (23). நரசிம்மலு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் வீரய்யாவுக்கு தெரியவந்தது.

    மகன் இளம்பெண்ணை காதல் செய்வது பிடிக்காததால் இளம்பெண் கடைக்கு, கோவிலுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மடக்கி காதலை கைவிடுமாறு மகனின் காதலியை வீரய்யா மிரட்டி வந்தார்.

    இதனால் இளம்பெண் மிகுந்த துயரத்திற்கு ஆளானார். இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்தார்.

    அவரும் இளம்பெண்ணை சிறிது நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறு சமாதானம் செய்து வந்தார்.

    இருப்பினும் வீரய்யா தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மலு கத்தியை எடுத்து வந்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தனது தந்தையை சரமாரியாக வெட்டினார்.

    இதில் வீரய்யா துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தந்தையின் கழுத்தை அறுத்த ரத்த கறை படிந்த கத்தியுடன் தனது காதலி வீட்டுக்கு சென்ற நரசிம்மலு காதலுக்கு இடையூறாக இருந்த தனது தந்தையை வெட்டி கொலை செய்து விட்டதாக தெருவில் நின்று சத்தமிட்டார்.

    நரசிம்மலுவின் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் நரசிம்மலு நின்று கொண்டு இருந்தார்.

    அங்கிருந்த பொதுமக்கள் நரசிம்மலுவை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் தன்னை பிடிக்க வந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.

    இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மலுவை பிடித்து கைது செய்து அவரது தந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×