என் மலர்

  நீங்கள் தேடியது "Mother Father Murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விசாரணையின் முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • பெற்றோரை மகன் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  பட்டீஸ்வரம்:

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள தில்லையம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 75). இவரது மனைவி லட்சுமி (70). இவர்களுக்கு ராஜேந்திரன் (50) உள்பட 2 மகன் உள்ளனர். இதில் ராஜேந்திரன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

  இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று வெகுநேரம் வீட்டின் கதவு திறந்து கிடந்தாலும் யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கோவிந்தராஜ், லட்சுமி ஆகிய 2 பேரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகில் ராஜேந்திரன் இருந்தார்.

  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையடுத்து ராஜேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராஜேந்திரன் திடீரென தாய், தந்தையை அரிவாளால் வெட்டி கொன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

  இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். எதற்காக தாய், தந்தையை வெட்டி கொன்றார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விசாரணையின் முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெற்றோரை மகன் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ×