search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father killed"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை மல்லி போலீசார் கைது செய்தனர்.
    • மது போதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் மணிகண்டன்(27). மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணபேரி கிராம நிர்வாக அலுவலர் உமாராணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.

    அப்போது ஆறுமுகம் மதுபோதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

    ஆனால் ஆறுமுகத்தின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உமாராணி மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், கடந்த 10-ம் இரவு குடிபோதையில் வந்த ஆறுமுகம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தும், அப்போது மகன் மணிகண்டன் தாக்கியதில் ஆறுமுகம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆறுமுகம் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    • மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தந்தை பெற்ற மகளை கொலை செய்தார்.
    • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம், வ.உ.சி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42). டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தர்ஷினி (8) என்ற மகள் உள்ளார். அவர் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் காளிமுத்து-பிரியதர்ஷினி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அப்போது அவர் தனது மகளை சிவகங்கையில் உள்ள அக்கா வீட்டிற்கு அழைத்து செல்லப்போவதாக கூறி வந்தார். இதைத்தொடர்ந்து காளிமுத்துவும், அவரது மகள் தர்ஷினியும் கடந்த 3-ந் தேதி திடீரென மாயமாகி விட்டனர்.

    இதற்கிடையே பிரியதர்ஷினி வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். உடனே பிரியதர்ஷினி வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பரணியில் இருந்த ஒரு சாக்கு மூட்டையில் தர்ஷினி பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி தர்ஷினி உடலை மீட்டனர். அப்போது சிறுமி கொலை செய்யப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அவரது உடலை திணித்து வைத்து மூட்டையாக கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்-மனைவி தகராறில் காளிமுத்து தனது மகளையே கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காளிமுத்துவை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு அருகே வீட்டை என் பெயருக்கு எழுதி வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    ராமசாமி மகன் நாராயணமூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நாராயணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபடுவாராம். மேலும் நாராயணமூர்த்தி தனது தந்தையிடம் வீட்டை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ராமசாமி மறுத்து விட்டார். நேற்று முன்தினம் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்கமணிக்கு எழுதி வைப்பதாக கூறினார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணமூர்த்தியை கைது செய்தனர்.

    அப்போது அவர் கூறும்போது சம்பவத்தன்று வீட்டை எனது பெயருக்கு எழுதி வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுத்து என்னை உதாசீனப்படுத்தினார். எனது வீட்டை உனது பெயருக்கு எழுதி கொடுக்க மாட்டேன் எனது மகள் தங்கமணி பெயரில்தான் எழுதி வைப்பேன். நீ குடித்து குடித்து விட்டை அழித்து விடுவாய் என்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து தந்தையை தாக்கினேன். மேலும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை அடித்தேன்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி போலீசில் வாக்கு மூலமாக தெரிவித்தார். இதையடுத்து நாராயண மூர்த்தியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

    பல்லாவரம் அருகே குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் மற்றும் தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பல்லாவரம் பாரதி நகர் அண்ணா தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜன். கார்பென்டர் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி குளோரியா, மகன் அந்தோணி வின்சென்ட் ராஜ்(25).

    ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மனைவி, மகனுடன் சண்டை போட்டு வந்தார். கடந்த 31-ந் தேதி தந்தைக்கும் மகனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ராஜனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சுய நினைவின்றி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ராஜனை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3-ந் தேதி சிகிச்சை பலனின்றி ராஜன் உயிரிழந்தார்.

    இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் முதன் முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் எந்த பகுதியில் விபத்து நடந்தது என மனைவி மற்றும் மகனிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

    அவர்களிடம் போலீசார் துருவித் துருவி கேள்வி கேட்டபோது பின்பு நடந்த சம்பவத்தைப் பற்றி ஒப்புக்கொண்டுள்ளனர் தற்போது கொலை வழக்காக பதிவு செய்து அந்தோணி வின்சென்ட் ராஜ் மற்றும் குளோரியா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    சிவகாசியில் தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகன் சதீஷ்குமார் (25). தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தந்தை என்றும் பாராமல் மாரிமுத்துவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி மாரிமுத்து அதே இடத்தில் துடி துடித்து இறந்து போனார். தந்தையை கொன்ற சதீஷ்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் உடலை பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டு வாலிபர் சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கம்பைநல்லூர் அருகே வேலைக்கு செல்லுமாறு கூறிய தந்தையை ஆத்திரத்துடன் கீழே தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த பெரமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 55). விவசாயியான இவரது மகன் ஆறுமுகம் (22). இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை பெரியசாமி மகனை கண்டித்தார். இதனால் பெரியசாமிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. 

    ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது தந்தை பெரியசாமியை பிடித்து தள்ளினார். இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்பைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெரியசாமியை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆறுமுகம் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சொத்து தகராறு காரணமாக கொல்லிமலை அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67), விவசாயி. இவரது மகன் ரவிச்சந்திரன் (38). லாரி டிரைவர்.

    கடந்த 28-ந் தேதி இரவு தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரவிச்சந்திரன் தனக்கு சொத்தில் பங்கு பிரித்து தரும்படி தந்தை ராமசாமியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு சொத்தில் தற்போது எந்தவித பங்கும் தர முடியாது என்று ராமசாமி கூறியதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ராமசாமிக்கு ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராமசாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து தந்தையை கொன்ற ரவிச்சந்திரனை கைது செய்தார்.

    பின்னர் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மகனே தந்தையை அடித்து கொன்ற சம்பவம் வாழவந்திநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இங்கிலாந்தில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்று புதைத்த பெண்ணுக்கு 9 ஆண்டு சிறைத்தணடனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    லண்டன், ஜூலை. 17-

    இங்கிலாந்தை சேர்ந்தவர் பார்பரா கடம்பீஸ் (63). இவர் திடீரென போலீஸ் நிலையம் சென்று கடந்த 2006-ம் ஆண்டில் தனது தந்தை கெனித்தை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டதாக கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பார்பரா வீட்டுக்கு சென்று புதைத்த இடத்தில் தோண்டினர். அங்கு எலும்பு கூடாக இருந்த கெனித் சடலத்தை கைப்பற்றினர்.

    அதையடுத்து பார்பரா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையை கொலை செய்தது ஏன் என போலீசில் திடுக் கிடும் வாக்கு மூலம் அளித் தார்.

    அதில், ‘‘எனது தந்தை சிறுவயதில் இருந்தே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னைப் போல பல பெண்களிடம் தவறாக நடந்து இருக்கிறார். 2006-ம் ஆண்டில் அவர் (கெனித்) வைத்திருந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    ஏனெனில் பல சிறுமி களின் நிர்வாண போட்டோக் களும் இருந்தது. அதில் என்னுடைய போட்டோவும் இருந்தது. என்னை நிர்வாண மாக்கி பலர் முன்னிலையில் கெனித் போட்டோ எடுத்துள் ளார். இதெல்லாம் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அவரை கொன்று வீட்டில் புதைத்தேன்’’ என்றார்.

    எனவே அவர் மீது கோர்ட் டில் வழக்கு தொடரப்பட் டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

    அரியலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 80). இவருக்கு பரமசிவம் (55) என்ற மகனும், வளர்மதி (52) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வளர்மதிக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் பரமசிவத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் , கிருஷ்ணமூர்த்தியை தாக்கி காலால் மிதித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பரமசிவத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காளிப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்ன சாமி (வயது 70). டி.வி. மெக்கானிக்.

    இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 33 சென்ட் நிலம் உள்ளது. அதனை பிரித்து கொடுக்குமாறு சின்னசாமியின் மூத்த மகன் சந்திரசேகர் (வயது31) கடந்த சில ஆண்டுகளாக தந்தையிடம் வற்புறுத்தி வந்தார்.

    ஆனால் சின்னசாமி நிலத்தை பிரித்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் தந்தை என்றும் பாராமல் அவரது கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் மூச்சு திணறி சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை பார்த்த சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் இளைய மகன் ரமேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு அவர் வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் மனைவி குழந்தையம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    அவரது வீட்டின் அருகில் சந்திரசேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்திரசேகருக்கு சந்தியா (25) என்ற மனைவியும், சஞ்சனா (3) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
    ×