மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்த தந்தை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தந்தை பெற்ற மகளை கொலை செய்தார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்த தந்தை
Published on

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம், வ.உ.சி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42). டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தர்ஷினி (8) என்ற மகள் உள்ளார். அவர் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் காளிமுத்து-பிரியதர்ஷினி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அப்போது அவர் தனது மகளை சிவகங்கையில் உள்ள அக்கா வீட்டிற்கு அழைத்து செல்லப்போவதாக கூறி வந்தார். இதைத்தொடர்ந்து காளிமுத்துவும், அவரது மகள் தர்ஷினியும் கடந்த 3-ந் தேதி திடீரென மாயமாகி விட்டனர்.

இதற்கிடையே பிரியதர்ஷினி வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். உடனே பிரியதர்ஷினி வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பரணியில் இருந்த ஒரு சாக்கு மூட்டையில் தர்ஷினி பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

இதுபற்றி அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி தர்ஷினி உடலை மீட்டனர். அப்போது சிறுமி கொலை செய்யப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அவரது உடலை திணித்து வைத்து மூட்டையாக கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன்-மனைவி தகராறில் காளிமுத்து தனது மகளையே கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காளிமுத்துவை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com