search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brother arrested for"

    • சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சி இந்திராபுரம் புதுகாலனி பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    போலீசார் விசாரணையில் கொண்டையம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துக்குமார் (22), அன்பழகன் (19) என்பதும் இவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பாலிதீன் கவரில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி இருவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
    • இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சஞ்சீவி காந்தி (43), நாகராஜ் (38) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் சஞ்சீவி காந்திக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி (7) என்ற மகளும் உள்ளனர், இவர் கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள சின்னகுளம் என்ற பகுதியில் குடியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

    இளையமகன் நாகராஜ் என்பவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். நாகராஜ் பங்களாப்புதூர் அண்ணா நகரில் தந்தை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் சஞ்சீவி காந்தி மற்றும் நாகராஜ் இருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சஞ்சீவி காந்தி பங்களாப்புதூர் அண்ணா நகரில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து சொத்தை பிரித்து தர வேண்டும் என கேட்டார்.

    இதை தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இவர்களை அவர்களது பெற்றோர் தடுத்தனர். ஆனால் 2 பேரும் தொடர்ந்து தாக்கி கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் நாக ராஜை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்த நாகராஜ்க்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பங்களா ப்புதூர் போலீசார் சஞ்சீவி காந்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதை தொடர்ந்து சஞ்சீவி காந்தியை போலீ சார் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் படுத்து கிறார்கள்.

    ×